முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியிலிருந்து இன்றும் இரண்டு எலும்புக் கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த எலும்புக்கூட்டு உடற் பகுதியிலிருந்து துப்பாக்கிச் சன்னங்கள், குண்டுச் சிதறல்கள் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளின் இலக்கத்தகடு என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.
இலக்கத் தகடுகள் பற்றிய விபரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.
இதனிடையே,
ஸ்கானர் இயந்திரங்கள் மூலம் புதைகுழியின் எல்லையினைக் கண்டறிவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்துள்ளார்.