சில தினங்களில் சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகும்!

editor 2

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும். அதற்கான நடவடிக்கைகள் முடிவடையும் நிலையில் இருக்கின்றன என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றில் நேற்று செவ்வாய்க் கிழமை இடம்பெற்ற வரவு – செலவுத் திட் டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஏழாவது நாள் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில் வெளியிட இருக்கின்றோம். அதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் முடியும் தறுவாயில் இருக்கின்றன.

அத்துடன் நாங்கள் இந்த முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வரலாற்றில் முதல் தடவையாக ஒருமாத காலத்தில் வெளியிட நடவடிக்கை எடுத்தோம்.

அதேநேரம் கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார்ப் படுத்தி முடித்திருக்கிறோம்.

கடந்த வருட உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் விடைத்தாள் பதிப்பிடும் நடவடிக்கை பிற்படுத்தப்பட்டதால் 3 மாதங்கள் வரை பிற்படுத்தப்பட்டது.

அவ்வாறு இல்லாவிட்டால் உயர்தரப் பரீட்சையை இந்த மாதம் ஆரம்பிக்கவே தீர்மானித்திருந்தோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share This Article