வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவேறியது!

editor 2

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 77 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதன்படி, 45 மேலதிக வாக்குகளால் வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டது.

கடந்த 13ஆம் திகதி நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அடுத்த வருடத்திற்கான வரவு – செலவுத்திட்டம் முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், 14ஆம் திகதி முதல் வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது.

நாளைய தினம் முதல் 19 தினங்களுக்கு குழுநிலை விவாதம் நடைபெறவுள்ளதுடன், வரவு – செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு, எதிர்வரும் டிசம்பர் மாதம் 13ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.

Share This Article