இலங்கையின் முன்னேற்றத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் இந்தியா வலியுறுத்தியது!

இலங்கையின் முன்னேற்றத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் இந்தியா வலியுறுத்தியது!

editor 2

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், புது டெல்லியில் உள்ள இந்தியாவின் நாடாளுமன்ற ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு சென்றுள்ள இலங்கை நாடாளுமன்றக் குழுவைச் சந்தித்துள்ளார். 

இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் நடத்தப்பட்ட பஹல்காம் தாக்குதலுக்கு இலங்கை கண்டனம் வெளியிட்டமை மற்றும் அனுதாபம் தெரிவித்தமையை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வரவேற்றுள்ளார். 

இந்தியாவின் அண்டைய நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கை குறித்தும், இரு நாட்டு மக்கள் தொடர்பு போன்றவை குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. 

குறிப்பாக இந்த சந்திப்பின் போது இலங்கையின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியதாக, அமைச்சர் ஜெய்சங்கர் தமது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 24 இலங்கை பங்கேற்பாளர்களைக் கொண்ட இந்தக் குழு புது டெல்லியில் நடைபெறும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்காக இந்தியாவுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Article