இலத்திரினியல் ஊடகங்களை கட்டுப்படுத்த சட்டம்!

editor 2

இலங்கையில் இலத்திரனியல் ஊடகங்களுக்கான ஒலி/ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுச் சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஊடகங்களுக்கான ஒலி/ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக சட்டமூலமொன்றை தயாரிப்பதற்காக வெகுசன ஊடக அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை இன்று இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அங்கு, முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலத்தைத் தயாரிக்கும் போது கவனம் செலுத்த வேண்டிய கொள்கை ரீதியான விடயங்கள் பற்றி பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் தலைமையில் அமைச்சரவை உபகுழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவால் முன்மொழியப்பட்டுள்ள ஒலி/ஒளிபரப்பு ஆணைக்குழுச் சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கு அடிப்படையாகக் கொள்வதற்காக பொருத்தமான ஏற்பாடுகளுடன் கூடிய அடிப்படைச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆரம்ப வரைபின் அடிப்படையில் சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share This Article