வட்டுக்கோட்டையில் கொலையானவருடன் கைதானவருக்கு பிணை!

editor 2

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டு பின்னர் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது உயிரிழந்தவருடன் உதவிக்குச் சென்றவர் பிணையில் செல்ல மல்லாகம் நீதிமன்றால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது.

இதன் போது பிரசன்னமாகிய சட்டத்தரணிகள்,

சந்தேகநபர் சித்திரவதை செய்யப்பட்டே கொல்லப்பட்டார் என்று மன்றில் சுட்டிக்காட்டி கொலை செய்யப்பட்டவருடன் பொலிஸ் நிலையம் சென்றபோது கைதான நபரை பிணையில் விடுதலை செய்ய வலியுறுத்தியிருக்கின்றனர்.

இதனை அடுத்து அவருக்கு பிணை வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

அதேவேளை,

குறித்த வழக்கு விசாரணையை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திலிருந்து மாற்றுமாறும் சட்டத்தரணிகள் வலியுறுத்தியிருந்த நிலையில் வழக்கு விசாரணையை அங்கிருந்து மாற்றுவது என்று நீதிபதியால் கட்டளை வழங்கப்பட்டதாக சட்டத்தரணி சுகாஷ் தெரிவித்துள்ளார்.

Share This Article