பிலிப்பைன்ஸில் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தினைச் சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவர் பங்குகொண்டு இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.
குறித்த போட்டியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முள்ளியவளை, முல்லைத்தீவைச் சேர்ந்த திருமதி அகிலத்திருநாயகி (முன்னாள் சிறைச்சாலைகள் உத்தியோகத்தர்) என்ற பெண் பங்குகொண்டிருந்தார்.
அவர் இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளதோடு ஒரு வெண்கலப்பதக்கத்தையும் பெற்றுள்ளார்.
இவர் 1,500 மீற்றர் ஓட்டம் மற்றும் 5000 மீற்றர் விரைவு நடை போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
இதேவேளை, 800 மீற்றர் ஓட்டத்தில் வெங்கலப் பதக்கத்தையும் 5000 மீற்றர் ஓட்டத்தில் நான்காம் இடத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.