வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், மேலும் பொலிஸார் இருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பொலிஸார் இருவரும் சம்பவத் தினத்தன்று கடமையில் ஈடுபட்டிருந்த நிலையில், இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் தாக்குதல் காரணமாகவே சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த இளைஞன் மரணத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
முன்னதாக இந்த சம்பவம் தொடர்பில், வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருந்ததுடன் பொலிஸ் நிலையச் சூழல் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.