உலகக் கிண்ணம்; ஆஸிக்கு ஓட்ட இலக்கு 241!

editor 2

2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்கு ஓட்ட இலக்காக 241 ஓட்டங்களை நிர்ணயித்தது இந்தியா.

இந்தியாவின் அஹமதாபாத்தில் இறுதிப் போட்டி நடைபெற்றுவருகிறது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி, களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றது.

இந்திய அணி சார்பில் அதிகபடியாக, கே.எல். ராகுல் 66 ஓட்டங்களையும், விராட் கோலி 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில், அவுஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் 55 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்தநிலையில், அவுஸ்திரேலிய அணி 241 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட தயாராகவுள்ளது.

Share This Article