இலங்கையின் பல பகுதிகளில் இன்றிரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளில் இன்றிரவு 100 மில்லிமீற்றருக்கும் அதிக அளவிலான மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் நிலவுவதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், மேல், கிழக்கு, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களின் சில இடங்களிலும் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கங்களும் ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.