தமிழகத்திற்குச் சென்ற இலங்கை வர்த்தகர் ஒருவர் சென்னையில் வைத்து அடையாளம் தெரியாதோரால் கடத்தப்பட்டு கப்பம் கோரப்பட்ட நிலையில் தமிழகப் பொலிஸாரால் மீட்கப்பட்டதுடன் சந்தேக நபர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த தகவலை இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
இலங்கை வர்த்தகர் கடத்தப்பட்ட நிலையில் அவருடைய மகளினை தொலைபேசி ஊடாகத் தொடர்புகொண்ட கடத்தல்காரர்கள் இந்திய ரூபாயில் 15 இலட்சம் ரூபா கப்பமாக செலுத்துமாறு அச்சுறுத்தியிருக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் தமிழகப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டிருக்கின்றது.
இதனை அடுத்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
கடத்தப்பட்டவர் பொலிஸாரால் மீட்கப்பட்ட நிலையில் பெண் ஒருவர் உட்பட்ட நால்வர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.