கடந்த இரவு பெய்த கடும் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பின் நகர் பகுதியில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேணாவில் பகுதியில் உள்ள குளம் ஒன்றின் ஊடாக வெளியேறிய நீர் புதுக்குடியிருப்பின் நகர் பகுதியில் தேங்கியிருப்பதாகவும் இதனால் நகரில் உள்ள சிறிசுப்பிரமணிய வித்தியாசாலை தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.
பாடசாலை வகுப்பறைகள், நகரில் உள்ள வர்த்தக நிலையங்களுக்குள் நீர் தேங்கியிருப்பதாகவும் ஏற்கனவே சீரமைக்கப்பட்ட வடிகால்கள் ஊடாக நீர் வெளியேற முடியாத நிலையில் உள்ளதாகவும் இதனால் புதுக்குடியிருப்பு நகரின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை,
பிந்திய தகவல்களின்படி புதுக்குடியிருப்பின் நகர் பகுதியை அண்மித்த பல வீடுகளுக்குள் நீர் தேங்கியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.