சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் விசேட தூதுவரும், அரச சபை உறுப்பினருமான ஷென் யிகின் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் நாளை முதல் 21 வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
மாலைதீவு ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட மொஹமட் முய்ஸூவின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மாலைதீவுக்கு செல்ல வுள்ள ஷென்யிகின், மாலைதீவு விஜயத்தை தொடர்ந்து இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இவர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அரசாங்கத்தின் உயர் மட்ட உறுப்பினர்களுடன் விசேட சந்திப்புகளையும் நடத்த உள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டதுடன், இதன்போது இருநாட்டு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது குறித்து
கலந்துரையாடல்களையும் நடத்தியிருந்தார்.
ஷென் யிகினியின் விஜயத்தில், சீனாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவு
டன் எட்டப்பட்ட சில உடன்பாடுகளின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வுசெய்யப்படும்.