சொகுசு பேருந்தில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு பயணித்த பெண் ஒருவரிடம் கொள்ளைக் கும்பல் ஒன்று ஒரு இலட்சம் ரூபா பணத்தினைத் திருடியுள்ளமை தொடர்பில் பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் கடந்த 02ஆம் திகதி இரவு பலாலியிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்தில் ஒரு குடும்பம் முற்பதிவு மேற்கொண்டு கொழும்புக்கு பயணத்தை மேற்கொண்டிருந்தது.
பேருந்து புத்தளம் பகுதியை வந்தடைந்த பொழுது 4 பெண்கள் 2 ஆண்களுமாக 6 பேர் பேரூந்தில்
பயணிகள் போர்வையில் ஏறியிருந்தனர்.
இதேவேளை, கோண்டாவில் பகுதியிலிருந்து ஏறிக்கொண்ட ஒரு குடும்பத்தின் 1 லட்சம் ரூபாய்
ரொக்க பணம் மேற்கூறிய ஆறு பேர்கொண்ட குழுவினால் கொழும்பு ஆமர் வீதிபகுதியில் பேருந்தில் வைத்து களவாடப்பட்டிருந்தது.
குறித்த பணத்தை களவாடியவர்கள் ஐந்து லாம்பு சந்தியில் இறங்கிக் கொண்டதாக பேருந்தின்
ஓட்டுநர் மற்றும் நடத்துநர் தெரிவித்திருந்தனர்.
பணத்தினை இழந்த குறித்த குடும்பத்தினர் கொழும்பு ஆமர் வீதி பகுதியில் இறங்க முற்படும்
போதே குறித்த கும்பலில் பெண் ஒருவர் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த இரகசிய கமெராவினை தனது கைப்பையினால் மறைக்கும் போது மற்றைய பெண் கோண்டாவில் பகுதியிலிருந்து ஏறிய பெண்ணின் கைப்பையினுள் பணத்தினை திருடும் காட்சிகள் இரகசிய கண்காணிப்பு கமராவினுள் பதிவாகியுள்ளது.
இதேவேளை குறித்த யாழ். குடும்பத்தினருக்கு பேருந்து நடத்துநர் பணம் களவாடப்படும் முன்பே
எச்சரிக்கை ஒன்றையும் விடுத்திருந்ததாக பணத்தினை இழந்த குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.
பணத்தினை களவாடியவர்கள் முற்பதிவு செய்தே குறித்த பேருந்தில் பயணித்திருந்ததாகவும் , அவர்கள் முற்பதிவு செய்ய அழைத்த தொலைபேசி இலக்கத்தையும் பணத்தை இழந்தவர்க
ளிடம் பேருந்து நடத்துனர் களினால் வழங்கப்பட்டிருந்தது.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் ரகசிய கண்காணிப்பு கமராமூலம் பெறப்பட்ட
காணொலிகள் மற்றும் கிடைக்கப்பெற்ற தொலை பேசி எண் என்பனவற்றை
வைத்து கொழும்பு கொட்டகேனா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.