இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் 21 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான வழக்கு, ஊர்காவற்துறை நீதவான் ஜே.கஜநிதிபாலன் முன்னிலையில், இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது 22 மீனவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், அவர்களில் 21 பேர் 5 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட, 18 மாத சிறைத்தண்டனையின் அடிப்படையில், விடுவிக்கப்பட்டதாக நீதிமன்றத்துக்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்.