அதிகவிலையில் விற்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை சீனியை நுகர்வோர் விவகார அதிகாரசபை கைப்பற்றியுள்ளது.
அண்மையில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சீனிக்கான வரி25 சதத்தில் இருந்து 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது.
பேலியாகொடையில் உள்ள களஞ்சியசாலையொன்றில் இருந்தே 270 மெற்றிக்தொன் சீனியை அதிகாரிகள் மீட்டுள்ளதுடன் குறித்து களஞ்சியசாலைக்கும் சீல் வைத்தனர்.
இதேவேளை, அதிகரித்த விலையில் சீனியை விற்பனைசெய்த கிராண்டபாஸில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் இருந்தும் 5 மெற்றிக் தொன் சீனியை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில், சீனியை அதிகரித்தவிலையில் விற்பனை செய்த சுமார் 300 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.