இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா!

editor 2

நியூசிலாந்து அணியை வெற்றிகொண்டு இந்தியா 70 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

2023 ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணத்தின் முதலாவது அரையிறுதி ஆட்டம் இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று (15) ஆரம்பமானது.

மும்பை, வான்கடேயில் இன்று (15) பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்புக்கு 397 ஓட்டங்களை குவித்தது.

இந்திய அணி சார்பில் விராட் கோஹ்லி 117(113) ஓட்டங்களையும், ஸ்ரேயஸ் அய்யர் 105 (70) ஓட்டங்களையும், சுப்மன் கில் 80 (66) ஓட்டங்களையும் மற்றும் ரோஹித் சர்மா 47 (29) ஓட்டங்களையும் பெற்றனர்.

இதன் மூலம் நியூஸிலாந்துக்கு வெற்றி இலக்காக 398 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 48.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 327 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.

2019 உலகக் கோப்பையில் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் அடிப்படையில்,

இறுதிப்போட்டிக்குள் நுழையும் முதலாவது அணியாக இந்திய அணி தேர்வாகியுள்ளது.

Share This Article