நாட்டில் இன்று பல பகுதிகளில் மழை!

editor 2

நாட்டின் பல பகுதிகளில் இன்று (12) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி மேல், மத்திய, சபரகமுவ, தென் மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களிலும் குருணாகல் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Share This Article