2024ஆம் ஆண்டு முற்பகுதிக்குள் பொதுத்தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியம் பிரகாசமாக தென்படுவதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிகாலம் 2025ஆம் ஆண்டுவரை இருந்தாலும், ஜனாதிபத தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்தும் நிலைப்பாட்டில் ஜனாதிபதி இருப்பதால் பாராளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்படும் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை, முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்தினால் ஏற்படும் அரசியல் ரீதியிலான தாக்கங்கள் உள்ளிட்ட காரணிக ளைக் கருத்திற்கொண்டே, அவசர பொதுத்தேர்தல் நடத்தப்படலாம் என தெரியவருகின்றது.