இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
உரிய நேரத்தில் தேர்தல்கள் இடம்பெறுவது ஜனநாயகத்துக்கு மிக அவசியமான விடயம்
என தெரிவித்துள்ள அவர், இதன் காரணமாக இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதித்
தேர்தல் நிச்சயம் இடம்பெறும் என கூறினார்.
இலங்கையின் அரசமைப்பின்படி ஏனைய தேர்தல்களும் இடம்பெறும் என அமெரிக்கா நம்பிக்கை கொண்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் அனைத்தும் மக்களுக்கான குரல்களை வழங்கும்.
அவர்கள் வாக்களிப்பின் மூலம் தங்கள் கருத்துக்களை வெளியிடமுடியும். தங்கள் தலைமையை தெரிவு செய்ய முடியும் என அமெரிக்கத் தூதுவர் தெரிவித்தார்.
அடுத்த வருடம் நடைபெறவேண்டிய தேர்தல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம். தந்திரமான நியாயமான தேர்தல் இடம்பெறுவதை எதிர்பார்த்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.