ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையின் அதிகாரிகளை நீக்கும் தீர்மானம் சபையில் நிறைவேறியது!

editor 2

ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையின் தலைவர் உள்ளிட்ட அதன் அதிகாரிகளை நீக்குவதற்காக நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

‘ஊழல் மிக்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளை நீக்குதல்’ எனும் தலைப்பில் ஆளும் மற்றும் எதிர்கட்சி என்பன இணைந்து குறித்த பிரேரணையை முன்வைத்திருந்தன.

குறித்த பிரேரணை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டதுடன் ஆளும் கட்சியினால் ஆமோதிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரேரணை நிறைவேற்றும் வேளையில் சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை.

Share This Article