தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ள பின்புலத்தில் தபால் சேவைகளை பேண வேண்டியதன் அவசியத்தை கருத்திற் கொண்டு, தபால் திணைக்களம் தனது ஊழியர்களின் சகல விடுமுறைகளையும் இரத்து செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, இன்று முதல் அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்படுவதாக தபால்மா அதிபர் ருவன் சரத்குமார தெரிவித்துள்ளார்.
கண்டி மற்றும் நுவரெலியாவில் உள்ள தபால அலுவலகங்களை விற்பனை செய்ய அரசாங்கம் மேற்கொண்டதாகக் கூறப்படும் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று நள்ளிரவு முதல் 48 மணிநேர அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு தபால் ஊழியர்கள் தீர்மானித்துள்ளதாக நேற்று முற்பகல் அறிவித்தனர்.
இந்தப் பிரச்னைக்கு அரசாங்கம் தீர்வு காணத் தவறினால் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு தபால் ஊழியர்கள் தயாராக இருப்பதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி யின் இணை அழைப்பாளர் சிந்திகபண்டார தெரிவித்துள்ளார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.