கொத்து ரொட்டி மற்றும் பிரைட் ரைசின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது.
இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், கொத்து மற்றும் பிரைட் ரைஸ் உள்ளிட்ட பல உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் இதனைத் தெரிவித்தார்.
சீனி, அரிசி, மரக்கறி, வெங்காயம், கோழிக்கறி உள்ளிட்ட பொருட்களின் விலையேற்றத்தை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதன்படி, சோற்றுப் பார்சல் ஒன்றின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதுடன், 20, கொத்து மற்றும் பிரைட் ரைஸ் ஒன்றின் விலை 20 ரூபாவினால் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, ஒரு கோப்பை பால் தேநீரின் விலை 10 ரூபாவால் உயர்த்தப்படவுள்ளதுடன், 10 மற்றும் ஒரு கோப்பை பிளேண்டியின் விலை 05 ரூபாவால் அதிகரிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.