சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றமையால் மின்சாரசபைக்கு 8 மாதங்களில் 8 கோடி ரூபா நட்டம்!

editor 2

சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தை பெற்றமையால் 08 மாதங்களில் சுமார் 8 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

ஒரு சிலர் மின் மானிகளை சட்டத்திற்கு முரணாக மாற்றியமைத்ததாலும் மின்பாவனைகளை குறைக்கும் வகையில் மின்மானிகளுடன் வேறு சாதனங்களை பொறுத்தியதாலும் குறித்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

கடந்த எட்டு மாதங்களில் சட்டத்திற்கு முரணான மின்மானி மாற்றங்கள் தொடர்பாக 1,041 முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் மின் கம்பிகளில் பல்வேறு சாதனங்களை  பொருத்தி மின்சாரம் பெற்றமை தொடர்பில் 81 முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தள்ளது. 

குறித்த விடயம் தொடர்பில் இனங்காணப்படுகின்ற நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில், அவர்களிடமிருந்து 36 இலட்சத்து,95 ஆயிரத்து 500 ரூபா அறவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Article