யாழ்ப்பாணத்தில் இருந்து படகு மூலம் தமிழகத்துக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. கேரளாவிலும் தாக்குதல் நடத்த உள்ளனர் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்தச் செய்திகளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யாழ்ப்பாணத்தில் இருந்து படகு மூலம் தமிழகத்துக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. இதற்காக இரு மாநிலங்களிலும், ஆட்களை நியமித்துள்ளனர். இதையடுத்து, பயங்கரவாத சக்திகளின் சதித் திட்டங்களை முறியடிக்க, கோவையில் தேசிய புலனாய்வு முகமை (என். ஐ. ஏ.) கிளை பணிமனையை ஆரம்பிக் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த பெப்ர வரி 2ஆம் தேதி சட்ட விரோத செயலில் பாகிஸ்தானைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மூவரும் தமிழகம் மற்றும் கேரளாவில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டி இருந்தது தெரியவந்தது.
சமீபத்தில், மஹா ராஷ்டிரா மாநில உளவுப்பிரிவு பொலிஸார் பயங்கரவாதிகள் ஊடுருவல் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.
இதில், பாகிஸ்தானின், லஷ் கர் – இ – தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பு தென் மாநிலங்களில் தாக்குதல் நடத்த, மூளைச்சலவை செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவது தெரியவந்தது.
இதனிடையே, யாழ்ப்பாணம் பகுதியில் இருந்து படகு மூலம் தமிழகத்துக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.
கேரளாவிலும் தாக்குதல் நடத்த உள்ளனர். இதற்காக, இரு மாநிலங்களிலும், ஆட்களை நியமித்துள்ளனர்.
இவர்கள் முஸ்லிம் இளைஞர்களை மூளைச்சலவை செய்து வருவதும் தெரியவந்தது.
இதையடுத்தே, தென் மாநிலங்களை குறிவைத்து தேசிய புலனாய்வு முகமை பணிமனை ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அந்தச் செய்திகளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.