யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடுமையான மழை காரணமாக பொலிகண்டி பகுதியில் உள்ள கிணறு ஒன்று இடிந்து கீழ் இறங்கியுள்ளது.
பொலிகண்டி வீரபத்திரர் கோவிலுக்கு அருகாமையில் உள்ள கிணறு ஒன்றே இவ்வாறு இடிந்து கீழ் இறங்கியுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள கிணற்றின் சுற்று கட்டு சுவர் நேற்று (03) வெள்ளிக்கிழமை காலை இடிந்து தாழ் இறங்கி உள்ளது. அத்துடன் கிணற்றுக்கு அருகில் உள்ள நிலப்பரப்பும் வெடிப்பு ஏற்பட்டு காணப்படுகின்றது.
கிணறு இடிந்ததற்கான காரணங்கள் எதுவும் உடனடியாக தெரியவராத நிலையிலும் மழை காரணமாக கிணறு இடிந்திருக்கலாம் என கருதப்படுகிறது.