கூட்டணி அரசாங்கத்தில் ஜனாதிபதி எவ்வாறு செயல்பட வேண்டும் என்று ஆளும் தரப்பின்
உறுப்பினர்கள் குறிப்பிடுவது நியாயமானதே. 2024 ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே களமிறக்குவோம் – என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
பத்தரமுல்லையில் உள்ள பொதுஜன பெரமுனவின் தலைமை பணிமனையில் அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், சுதந்திரத்துக்கு பின்னரான காலப்பகுதியில் நாட்டுக்காக எமது கட்சியே அர்ப்பணிப்புடன் செயல் பட்டது. 2019ஆம் ஆண்டு பெரும் எதிர்பார்ப்புடன் மக்கள் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தெரிவுசெய்து, 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் ஊடாக ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.
2019ஆம் ஆண்டு இறுதி பகுதியில் பூகோள மட்டத்தில் தாக்கம் செலுத்திய கோவிட் பெருந்தொற்று தாக்கத்தில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவதானம் செலுத்தினார்.
பொருளாதாரத்தை காட்டிலும் மக்களின் சுகாதாரம் குறித்து அவர் கவனம் செலுத்தி அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.
நாட்டில் கோவிட் பெருந்தொற்று தாக்கம் செலுத்தியதை ஒரு தரப்பினர் தற்போது மறந்து விட்டார்கள். பொருளாதார நெருக்கடியை எமது அமைச்சரவையில் அங்கம் வகித்தவர்கள் அரசியல் நெருக்கடியாக மாற்றியமைத்தார்கள்.
அப்போதைய சூழலில் ஜனநாயகம் மற்றும் சட்டம் ஒழுங்கு என்பவற்றை பாது
காக்க வேண்டிய பொறுப்பு எமக்கு இருந்தது.
அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டது.
அவர்கள் ஏற்கவில்லை. அதனை தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தமையால் அவரின் கொள்கைகளை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிற்பட்ட காலத்தில் அரசாங்கம் எடுத்த தீர்மானங்களுக்கும் அவர் ஒத்துழைப்பு வழங்கவில்லை. மத்திய வங்கி பிணைமுறி மோசடியை தடுப்பதற்கு அவர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே தவறை சுட்டிக்காட்டும் தற்துணிவு எமக்குண்டு.
பாராளுமன்றத்தின் ஊடாக இடைக்கால ஜனாதிபதியாகவே ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்துள்ளோம். கூட்டணி அரசாங்கத்தில் ஜனாதிபதி எவ்வாறு செயல்பட வேண்டும் என்று ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் குறிப்பிடுவது நியாயமானதே. 2024 ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெர
முனவின் உறுப்பினரையே களமிறக்கு வோம் – என்றார்.