இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் ஆயிரத்து 680 பேர் விஸா புதுப்பிக்க விண்ணப்பம்!

editor 2

விஸா அனுமதி பத்திரத்தை புதுப்பிப்பதற்காக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்திற்கு ஆயிரத்து 680 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அந்த நாட்டுக்கான
இலங்கை தூதுவர் நிமல்பண்டார தெரிவித்தார்.

அத்துடன் சட்டவிரோத விஸா அனுமதிப் பத்திரத்தின் ஊடாக இஸ்ரேலுக்குள் நுழைந்த இரண்டாயிரத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் உள்ளதாகவும் தூதுவர் நிமல் பண்டார குறிப்பிட்டார்.

அதேநேரம் ஹமாஸ் தரப்பினரால் பணயக் கைதிகளாக அழைத்து செல்லப்பட்டுள்ளவர்களில் இலங்கையர்கள் அடங்குவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும் பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர்ப்பட்டியல் எதுவும் வெளியாகவில்லை எனவும் இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.

Share This Article