மட்டக்களப்பிலுள்ள பாடசாலையொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து மாணவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீதிமன்றத்தில் கடமையாற்றிவரும் நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த பாடசாலையில் மாணவர் ஒருவர் மீது இரண்டு சக மாணவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவர் தமது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இந்தநிலையில் குறித்த மாணவனின் தந்தை, பாடசாலைக்குள் புகுந்து தமது மகனை தாக்கிய மாணவர்களுக்கு பதிலாக வேறு ஒரு மணவன் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்படும் மாணவரின் பெற்றோர் அளித்த முறைப்பாட்டையடுத்து நீதிமன்றில் கடமையாற்றிவரும் ஒருவரை சந்தேகத்தின் பேரில் இன்றைய தினம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.