தேர்தலை நடத்துவதற்கு வரவு – செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை!

editor 2

ஜனாதிபதித் தேர்தல் அடுத்த வருடம் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தேர்தலை நடத்துவதற்கு 1,000 கோடி ரூபாவை ஒதுக்குமாறு தேசிய தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் 13 ஆம் திகதி முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் ஜனாதிபதித் தேர்தலுக்காக மேற்படி தொகை
ஒதுக்கப்பட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

அத்துடன், இது தொடர்பான செலவு மதீப்பீட்டு அறிக்கை திறைசேரிக்கு அனுப்பி வைக்கப்
பட்டுள்ளது. இந்தத் தகவலை தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீP ரத்நாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.

‘வரவு – செலவுத் திட்டம் முன்வைக்கப்படுவதற்கு முன்னர் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் மதிப்பீட்டு அறிக்கைகளை திறைசேரி கோரும். அந்தவகையில் ஜனாதிபதி தேர்தல், பொதுத்தேர்தல், மாகாணசபைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சிசபைத் தேர்தல்களுக்
கான செலவு மதிப்பீட்டு அறிக்கைகளை அனுப்பி வைத்துள்ளோம்.’ – எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்படி தேர்தல்களை நடத்த தலா 10 பில்லியன் ரூபா தேவையென மதிப்பிடப்பட்டுள்ளது.

Share This Article