அவுஸ்திரேலிய பொலிஸாரின் ஒத்துழைப்புடன் ஆட்கடத்தல், மனித வியாபாரம் கடல் சார் குற்றப்புலனாய்வுப் பிரிவு மன்னாரில் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
மன்னார் – கோந்தைப் பிட்டியில் இந்த புதிய குற்றப் புலனாய்வுப் பிரிவு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வின் பிரதம அதிதியாக அவுஸ்திரேலியாவின் பெடரல் பொலிஸின் இலங்கைக் கிளை பொலிஸ் அத்தியட்சகர் ரொபர்ட்வில்சன் வருகை தந்திருந்தார்.
மன்னார் மாவட்டத்தின் கடற்பரப்புகளில் மேற்கொள்ளப்படும் ஆட்கடத்தல், மனித வியாபரம், மற்றும் கடல்சார் குற்றங்களை கட்டுப்படுத்துவதற்காக இந்த புதிய குற்றப்புலனாய்வுப் பிரிவு திறந்து வைக்கப்பட்டது.
அவுஸ்திரேலிய பொலிஸாரின் 150 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் குற்றப்புலனாய்வு அலுவலகம் நிர்மாணிக்கப்பட்டு நேற்று அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் குற்றப்புலனாய்வுப் பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரசாத் ரணசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் மன்னார் மாவட்டத்தில் இடம்பெறும் கடல்சார் பிரச்னைகள் தொடர்பில் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அவுஸ்திரேலியாவின் பெடரல் பொலிஸின் இலங்கைக்கிளை பொலிஸ் அத்தியட்சகர் ரொபர்ட் வில்சன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.