தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்கான கட்டணத்தை அதிகரித்து பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, தேசிய அடையாள அட்டையின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதியொன்றினை வழங்குவதற்கான கட்டணம் 2 ஆயிரம் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேசிய அடையாள அட்டைக்கான பதிவுச் சான்றிதழைப் புதுப்பிப்பதற்கான வருடாந்தக் கட்டணம் ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய தேசிய அடையாள அட்டைக்கான பதிவுச்சான்றிதழை பெற மூவாயிரம் ரூபாவை கட்டணமாக செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.