வெளிநாட்டுக்கு அனுப்புவதாக மோசடி; யாழில் பணியாற்றும் இராணுவ மேஜர் மீது நடவடிக்கை!

editor 2

அமெரிக்காவுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி இராணுவ மேஜரும், மனைவியும் சுமார் 42 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாகவும், மனைவியை கைது செய்துள்ளதாகவும் பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாணந்துறை கோரகன கிராமத்தைச் சேர்ந்த 46 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இராணுவ மேஜரை கைது செய்ய பொலிஸார் விசாரணகளை நடத்தி வருகின்றனர்.

சந்தேகத்திற்குரிய மேஜர் யாழ்ப்பாணம், எழுதுமட்டுவாழில் உள்ள முகாமில் பணிபுரிவதாக தகவல் கிடைத்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாணந்துறை வடக்கு பொலிஸாருக்கு 5 முறைப்பாடுகள் மற்றும் தெஹிவளை, கல்கிசை உள்ளிட்ட பல பொலிஸ் நிலையங்களுக்கு கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகத்திற்குரிய பெண்ணின் வீட்டில் ஐந்து கடவுச்சீட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் 42இலட்சம் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேகநபரான பெண்ணின் கணவரான மேஜரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சந்தேகநபர் பாணந்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்படவுள்ளார்.

Share This Article