ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்றைய தினம் இடம்பெறவுள்ளது. நாடளாவிய ரீதியில் 2 ஆயிரத்து 888 பரீட்சை நிலையங்களில் மூன்று இலட்சத்து 37 ஆயிரத்து 956 பரீட்சார்த்திகள் இந்த முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.
இந்தநிலையில், பரீட்சை நிலையத்துக்கு மாணவர்களை உரிய நேரத்துக்கு அழைத்துச் செல்ல பெற்றோர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர கோரியுள்ளார்.
மாணவர்களை பரீட்சை நிலையத்திற்கு அனுப்பியதன் பின்னர், பரீட்சை நிலைய வளாகத்திற்குள் பிரவேசிக்க வேண்டாம் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளைஇ புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் பிள்ளைகளின் மன ஒருமைப்பாட்டைப் பேணுவதற்கு பெற்றோர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உளவியலாளர் வைத்தியர் ரூமி ரூபன் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன்இ சீரற்ற காலநிலை காரணமாக, உரிய பரீட்சை நிலையத்திற்கு செல்ல முடியாத மாணவர்கள், அருகில் உள்ள பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.