ஜனாதிபதித் தேர்தல் ஒத்திவைக்கப்படுவது தவறான முடிவு என்கிறார் மஹிந்த!

editor 2

ஜனாதிபதித் தேர்தல் ஒத்திவைக்கப்படுமானால் அது தவறானதொரு முடிவாகவே இருக்கும். உரிய நேரத்துக்குள் அத்தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலை பிற்போடுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுவருவதாக வெளியா
கும் தகவல்கள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மகிந்த மேற்கண்டவாறு கூறினார்.

‘இது தொடர்பில் எனக்கு அறியக் கிடைக்கவில்லை. எது எப்படி இருந்தாலும் அவ்வாறு
ஒத்திவைக்கப்பட்டால் அது தவறு. உரிய நேரத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

மக்கள் எமது பக்கம் நின்று ஒத்துழைப்பு வழங்குவார்கள் என நம்புகின்றேன்.’ – எனவும்
அவர் குறிப்பிட்டார்.

மொட்டு கட்சியின் தலைமைப்பதவி குறித்து எழுப்பட்ட கேள்விக்கு, ‘எதிர்காலத்தில் நிச்சயம்
மாற்றம் வரும், என்னாளும் என்னால் பதவியில் இருக்க முடியாது அல்லவா’ – என பதிலளித்தார்
மகிந்த.

Share This Article