குப்பைக்குத் தீ வைத்த பெண் தீ விபத்தில் சிக்கி மரணம்!

editor 2

வீட்டில் குப்பைக்கு வைத்த நெருப்பு ஆடையில் பற்றியதில் பெண் ஒருவர் காயமடைந்து
சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

தென்மராட்சி – சாவகச்சேரி – சங்கத்தானையை சேர்ந்த 4 பிள்ளைகளின் தாயான சுகந்தன் தயாபரி (வயது-37) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

உயிரிழந்த பெண், கடந்த 7ஆம் திகதி வீட்டுக் காணியை துப்புரவு செய்த குப்பையை மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துள்ளார்.

அப்போது அவரின் ஆடையில் தீ பற்றியது.

வீட்டிலிருந்தவர்கள் அவரை காப்பாற்றி சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்ப்பித்தனர்.

மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்.போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்றுமுன்தினம் உயிரிழந்தார்.

Share This Article