இந்திய மீனவர்கள் விடயத்தில் இலங்கைக் கடற்படை எந்த தவறும் செய்யவில்லை – அமைச்சர் டக்ளஸ்!

editor 2

இந்திய மீனவர்கள் விடயத்தில் இலங்கை கடற்படையினர் எந்தவித தவறுகளையும் இழைக்கவில்லையென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபடும் அயல்நாட்டு மீனவர்களை, தடுப்பது கடற்படையினரின் தனிப்பட்ட பிரச்சினை இல்லையெனவும், இது வடக்கிலுள்ள தமிழ் மீனவர்களின் பிரச்சினை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இந்த விடயம் குறித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழக அரசாங்கத்துக்கு விளக்கமளிக்க வேண்டுமெனவும், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

Share This Article