இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் நேற்று மாலை இலங்கை வந்தடைந்தார்.
இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் 23ஆவது அமைச்சர் மட்ட கூட்டம் இன்று புதன்கிழமை ஆரம்பமாகிறது.
இதில், பங்கேற்பதற்காகவே அவர் இலங்கை வந்தார்.
கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் அவரை இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் நேரில் சென்று வரவேற்றார்.
அப்போது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயும் உடனிருந்தார்.
இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் இன்றைய தினம் இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் 23ஆவது அமைச்சர் மட்டகூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.
தொடர்ந்து, ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க உள்ளிட்ட அரச உயர்மட்டத்தின
ரையும் சந்திக்கவுள்ளார்.
இதைத் தொடர்ந்து நாளை திருகோணமலை செல்லவுள்ள அவர் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உள்ளிட்டவர்களைச் சந்திப்பார்.
இதன்போது, இந்திய நிதி உதவியின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள சில திட்டங்களை அவர் பயனாளிகளுக்கு கையளிக்கவுள்ளார்.
தொடர்ந்து திருகோணமலையில் இந்தியா முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் குறித்தும் ஆராய்வார்.
அத்துடன்,வரலாற்றுச் சிறப்பு மிக்க திருக்கோணஸ்வரர் ஆலயத்திலும் வழிபாட்டில் ஈடுபடவுள்ளார்இ