மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைவாக இந்த மாதம் முதல் மின் கட்டண அதிகரிப்பை நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி வழங்கும் சாத்தியம் உள்ளது என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார்.
கட்டண உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நாள் முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்த அதிகாரி, பொதுப் பயன்பாட்டுச் சட்டத் தின்படி மக்களின் கருத்துகளைப் பெற 21 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
எதிர்வரும் 18ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் மக்களிடம் வாய்மூலம் கருத்துகளை பெற்றுக்கொள்ள சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்த அதிகாரி, அதன் பின்னரே அனுமதி வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும் என்றும் சொன்னார்.