அனைத்து தரங்களிலும் உள்ள மாணவர்கள் நாளாந்தம் பாடசாலைக்கு சமுகமளிக்க வேண்டியது கட்டாயமானது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி – அயகம பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்களின் நாளாந்த பாடசாலை வருகை வீழ்ச்சியடையுமாயின், எதிர்வரும் காலங்களில் நடத்தப்படும் பரீட்சைகளில் அவர்களுக்கு புள்ளிகள் வழங்கப்படமாட்டாது எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அடுத்த வருடம் ஜனவரி மாதம், கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இடம்பெறுகின்ற சந்தர்ப்பத்திலும் ஆரம்பப் பிரிவுகளுக்கான கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.