வாகனங்கள் தவிர்ந்த பொருட்களுக்கான இறக்குமதித் தடை நீக்கம்!

editor 2

வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பொருட்களுக்குமான இறக்குமதித் தடைகள் இன்று முதல் நீக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்த அறிவிப்பை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய சற்று முன்னர் வெளியிட்டுள்ளார்.

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட போது ஆயிரக்கணக்கான பொருட்களுக்கு இறக்குமதித் தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This Article