காஸா பகுதியில் இடம்பெற்ற மோதலில் இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் மற்றுமொரு இலங்கையர் காணாமல் போயுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் 08 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வாழ்கின்றனர் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
அவர்களில் பெரும்பாலானோர் டெல் அவிவ், ஜெருசலேம் மற்றும் ஹைஃபா நகரங்களை மையமாக கொண்டு வசித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த நிமல் பண்டார,
“தென் பிராந்தியத்தில் இருந்த இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளார். அவர் சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் ஊழியர். வயிற்றிலும் கையிலும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது நிலை கவலைக்கிடமாக இல்லை. மற்றுமொரு இலங்கை இளைஞரைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றாலும் அவர் தொடர்பில் அறிய செஞ்சிலுவைச் சங்கத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது என்றார்.