பொதிகளில் பணம்; அவுஸ்திரேலியாவில் சிக்கிய தமிழர்!

editor 2

இலங்கையின் கிழக்கு மாகாணத்தைப் பூர்விகமாகக் கொண்ட தமிழர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் பொதிகளில் பணத்தினைக் கொண்டு சென்று வங்கிகளில் வைப்பிலிட்டமை தொடர்பில் நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டிருக்கிறார்.

வங்கிகளின் மதிப்பீட்டின்படி 80 ஆயிரம் அவுஸ்திரேலியன் டொலர்கள் வைப்பிலிட்டமை அம்பலமாகியுள்ளது.

2022 ஆம் ஆண்டு சிட்டினியின் பல்வேறு வங்கிகளில் அவர் பொதிகளில் கொண்டு சென்ற பணத்தினை வைப்பிலிட்டுள்ளமையை இரகசிய கண்காணிப்பினை மேற்கொண்ட பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஆறு மாதங்களில் 8.72 மில்லியன் அவுஸ்திரேலியன் டொலர் பணத்தினை அவர் வைப்பிலிட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்றல் மற்றும் சட்டவிரோதக் குழுக்களுடனான தொடர்புகள் மூலம் கூடுதல் பணத்தினை அவர் பெற்றிருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

குறித்த நபரின் நடவடிக்கை, நாடு கடந்த மிகக் பெரிய அளவிலான வலையமைப்பின் ஒரு பகுதியாக இருக்கக்கூடும் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த வலையமைப்பு ஆட்கடத்தல், சட்டவிரோத பணப்பரிமாற்றல், போதைப்பொருள் வர்த்தகம் போன்ற ஏதாவது நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டதாக இருக்கக்கூடும் என்று அவுஸ்திரேலிய ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.

இதனிடையே,

அரசாங்கத்துக்கு உரிய வரி செலுத்தாமை, வருமானம் ஈட்டப்படும் மூலங்களை வெளிப்படுத்தாமை உட்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவர் மீதான விசாரணைகள் இடம்பெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த பண விவகாரங்கள் தொடர்பில் குறித்த நபர் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ள நிலையில் அது குறித்த விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கூடுதல் பணம் கையாள்தல் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவர் 15 ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனையை அனுபவிக்கநேரிடும் என்றும் அந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Share This Article