தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான பிரத்தியேக வகுப்புகள் உள்ளிட்ட செயற்பாடுகள் எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவுடன் தடை செய்யப்படுவதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஐந்தாம் தர புலமைப்பரிசில் எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்தநிலையில், குறித்த பரீட்சை சார்ந்த விரிவுரைகள், கற்பித்தல் வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் என்பவற்றை நடத்துவதற்கு இவ்வாறு தடை விதிக்கப்படுவதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த தடையை மீறும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.