மலேசிய பொலிஸாரினால் தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கையர் ஒருவர் உயிரிழந்தமை குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு கெப்பொங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மலேசியாவின் ஜின்ஜாங் மத்திய சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 43 வயது இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இது குறித்து விசாரணைகளை கோரியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனைத்து தரப்பினரும் காலஅவகாசத்தை வழங்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொலிஸாரினால் தடுத்துவைக்கப்பட்டிருந்தவேளை இடம்பெற்ற மரணம் குறித்து தீவிரநடவடிக்கை எடுக்கவேண்டும் உடற்கூற்று பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும் சிசிடிவியை தீவிரமாக ஆராயவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட சிறைச்சாலையில் சிசிடிவி இல்லாவிட்டால் அதற்கான விளக்கத்தை பொலிஸார் அளிக்கவேண்டும் என தெரிவித்துள்ள மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் உயிரிழந்தவர் சென்டுலில் மூன்றுபேர் உயிரிழந்தை தொடர்பில் 22 ம் திகதி அவருடைய மனைவியுடன் கைதுசெய்யப்பட்டார் அவருடைய தடுப்புக்காவல் ஐந்தாம் திகதி வரை நீடிக்கப்பட்ட நிலையில் அவர் 30 திகதி உயிரிழந்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த கொலை தொடர்பில் மேலும் ஏழுபேர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்-