ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு வசதியாக அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் ஊடாக ஆயிரத்து 100 கோடி ரூபாய் ஒதுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசமைப்பின் பிரகாரம் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டிய வருடம் என்பதால் இந்த நிதி ஒதுக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த வருடம் ஜூலை மக்கள் எதிர்ப்பால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியிலிருந்து அகற்றப்பட்டதையடுத்து, நாடாளுமன்றத்தின் மூலம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு செப்ரெம்பர் இறுதியில் நிறைவடையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.