இலங்கை இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்கத் திட்டம்!

editor 2
Military boots and camouflage trousers of many soldiers in uniform in a row during a training

இலங்கை இராணுவத்தினரின் எண்ணிக்கையை எதிர்வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு இலட்சமாக குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

தற்போது இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டிருக்கும் இராணுவத்தின் எண்ணிக்கையை பாதிக்க குறைப்பது அரசாங்கத்தின் இலக்காக இருந்து வருகிறது.

எதிர்வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் இராணுவத்தின் எண்ணிக்கையை ஒரு லட்சமாக குறைக்க அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக் கோன் தெரிவித்துள்ளார்.

இதற்கு இணையாக கடற்படை மற்றும் விமானப்படையினரின் எண்ணிக்கை குறைக்க அரசாங்கம் எண்ணியுள்ளதாகவும் அவர் கூறினார்

Share This Article