தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் கொட்டும் மழையின் உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளது.
நல்லூர் பின் வீதியில் தியாகதீபம் திலீபன் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியில் வணக்க நிகழ்வுகள் நடைபெற்றிருந்தன.
ஏற்கனவே ஊரெழுவிலிருந்து புறப்பட்ட நினைவூர்தி நிகழ்விடத்தை வந்தடைந்திருந்தது.
அதேபோல,
இளைஞர் ஒருவர் தூக்குக்காவடியில் வந்து அஞ்சலி செய்திருந்தார்.
மாவீரர்களின் தாயார் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தார்.
அதேபோல முன்னாள் போராளிகள், அரசியல் பிரமுகர்கள், மக்கள் எனப் பெருமளவானோர் கொட்டும் மழையிலும் உணர்வுபூர்வமாக சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.