சீனக்கப்பலின் இலங்கை வருகை தொடர்பில் அமெரிக்கா கவலை!

editor 2

சீன ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான் 6 இன் இலங்கைக்காக வருகை தொடர்பில் அமெரிக்காவின் அரசியல் விவாகாரங்களுக்கான இராஜாங்க செயலாளர் விக்டோரியா நூலண்ட், கவலை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிவிகார அமைச்சர் அலி சப்ரிக்கும் அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான இராஜாங்க செயலாளர் விக்டோரியா நூலண்டுக்கும் இடையில் கடந்த வாரம் சந்திப்பொன்று இடம்பெற்றது.

குறித்த சந்திப்பின்போது, அவர் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் கவலை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், இலங்கை ஒரு நடுநிலை நாடு என்ற வகையில், வெளிநாட்டு கப்பல்கள் மற்றும் விமானங்கள் இலங்கையின் எந்தப்பகுதியில் தமது நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பில், நிலையான செயற்பாட்டு நடைமுறை ஒன்றை இலங்கை பின்பற்றி வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெளிவுப்படுத்தியுள்ளார்.

அனைத்து நாடுகளுக்கும் இந்த அணுகுமுறையில் இலங்கை நடுநிலையில் இருக்கும் எனவும் அதன் விளைவாக சீனாவை மாத்திரம் இந்த செயல்முறையிலிருந்து புறக்கணிக்க முடியாது எனவும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

சீனாவின் ஷி யான் 6 என்ற ஆராய்ச்சிக் கப்பல் அடுத்த மாதம் இலங்கையின் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்துடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Share This Article