நியூசிலாந்தில் குடியுரிமை அறிவிப்பு நிகழ்வாக பெருமெடுப்பில் நடைபெறுவது வழக்கம்.
அவ்வாறு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து நியூசிலாந்தில் குடியேறிய இளைஞர் ஒருவருக்கும் அண்மையில் குடியுரிமை அறிவிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட இளைஞர், தனக்கான குடியுரிமை கிடைத்தமை தொடர்பிலான அறிவிப்பு வெளியாகியவுடன் அரங்கில் நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
குறித்த நிகழ்வினை நியூசிலாந்தின் பிரபல ஊடகங்கள் பல வெளியிட்டுள்ளன. குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.